தங்கம் கடத்திய
இலங்கையர் இருவர்
சென்னையில் கைது
இந்தியாவிற்கு
தங்கம் கடத்த
முயன்ற இலங்கை
பிரஜைகள் இருவர்
சென்னை விமான
நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து
மூன்று கிலோகிராம்
தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேயிலைத்
தூளில் மறைத்து
வைத்து தங்கத்தை
கொண்டு சென்ற
போது சந்தேகநபர்கள்
சென்னை விமான
நிலையத்தில் நேற்று
கைது செய்யப்பட்டதாக
இந்திய ஊடகங்கள்
தெரிவிக்கின்றன.
இலங்கையைச் சேர்ந்த இருவர் சுற்றுலா பயணி விசாவில் வந்தனர். இருவரும்
தேயிலை பாக்கெட்டுகளை
எடுத்து வந்தனர்.
அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்தபோது அதனுள்
தங்க கட்டிகள்
மறைத்து வைத்ததை
கண்டனர். மொத்தம்
3 கிலோ தங்க
கட்டிகளை பறிமுதல்
செய்தனர்.
கைது
செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விமான நிலைய வருவாய்
புலனாய்வு துறையினர்
விசாரணை மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment