பலி எண்ணிக்கை 173ஆக உயர்வு
காசா மீது
இஸ்ரேல் விமானங்கள்
தொடர் தாக்குதல்
நடத்தி வருவதால் பதற்றம்
காசா
மீது இஸ்ரேல்
விமானங்கள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால்
பதற்றம் அதிகரித்துள்ளது.
காசாவின் தெற்கு
பகுதியில் நேற்று
இஸ்ரேல் விமானங்கள்
நடத்திய வான்
வழித் தாக்குதலில்
தந்தை மகன்
உள்பட 4 பாலஸ்தீனர்கள்
கொல்லப்பட்டனர். இதன் மூலம் தாக்குதலில் உயிர்
இழந்தவர்களின் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது பலியானவர்களில்
36 குழந்தைகளும், 32 பெண்களும் அடங்கும்.
இதனிடையே இஸ்ரேலின்
தாக்குதலுக்கு 1154 பேர் காயம்
அடைந்துள்ளனர்.
இஸ்ரேல்
மீது தொடர்
ராக்கெட் தாக்குதலை
நடத்த அல்குசாம்
மற்றும் இதர
அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. கடந்த 7 நாட்களில் இஸ்ரேல் மீது 700 முறை
ராக்கெட் குண்டு
தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக
அல்குசாம் அமைப்பு
தெரிவித்துள்ளது பதிலுக்கு இஸ்ரேல் விமானங்கள் தொடர்
வான் வழித்
தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதனால் ஏராளமான
பாலஸ்தீனர்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி
பாதுகாப்பான இடங்களில்
தஞ்சம் புகுந்து
வருகின்றனர். இரு தரப்பினர்க்கும் இடையேயான சண்டை
வலுத்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.






.jpg)

.jpg)



.jpg)
.jpg)
0 comments:
Post a Comment