கச்சத்தீவைச் சுற்றி மீன்பிடிக்கதமிழக மீனவர்களுக்கு லைசன்ஸ்
.
இலங்கையை வலியுறுத்த
இந்திய மத்திய அரசு திட்டம்
கச்சத்தீவைச்
சுற்றியுள்ள
இலங்கை கடல்
பகுதியில், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க
வர்த்தக உரிமம்
வழங்கும்படி இலங்கையிடம் வலியுறுத்த இந்திய மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. இந்தியா, இலங்கை
இடையேயுள்ள கச்சத்தீவை, இலங்கைக்கு கடந்த 1974ஆம்
ஆண்டு அப்போதைய
பிரதமர் இந்திரா
காந்தி வழங்கினார்.
அதன்பின்பு கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும்
தமிழக மீனவர்களை
இலங்கை அரசு
கைது செய்வது
தொடர்கதையாக நடந்து வருகிறது. மீனவர்களின் பிரச்னையை
தீர்க்க நடந்த
இரு தரப்பு
பேச்சுவார்த்தைகள் எந்த பலனும்
அளிக்கவில்லை. அதனால் கச்சத்திவை இலங்கையிடமிருந்து, இந்தியா திரும்ப பெற வேண்டும்
என்ற கோரிக்கை
இந்தியாவில் வலுத்து வருகிறது.
இந்நிலையில்
வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அரசு முறைப்
பயணமாக நாளை
மறுநாள் டில்லி
செல்கிறார். அவர் இந்திய வெளியுறவுத்துறை
அமைச்சர் சுஷ்மா
சுவராஜை சந்தித்து
பேசவுள்ளார். அப்போது கச்சத்தீவை சுற்றியுள்ள இலங்கை
கடல் பகுதியில்,
தமிழக மீனவர்கள்
மீன் பிடிக்க,
இலங்கை அரசு
வர்த்தக உரிமம்
வழங்கும்படி இந்திய மத்திய அரசு சார்பில் வேண்டுகோள்
விடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
.jpg)
.jpg)
0 comments:
Post a Comment