இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகியும்
வேலைகள் முடிவடையாது பாதியிலேயே இருந்து கொண்டிருக்கும்
நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை (மத்திய) வீதி
எம்.சஹாப்தீன்

நிந்தவூர்
மாவட்ட வைத்தியசாலை
( மத்திய ) வீதியின்
புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (16.07.2014) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன . ஆனால் , இன்னும் இதன் வேலைகள்
முடிவடையாது பாதியிலேயே இருந்து கொண்டிருக்கின்றன .
கடற்கரையில்
அமைந்துள்ள வைத்தியசலையின் அம்புலனடஸ் வண்டியின் போக்குவரத்திற்கும் ,
பொது சுகாதார
காரியாலயத்தினதும் , ஆயுர்வேத வைத்தியசாலையினதும் ,
ஹாஷிபுல் உலூம்
அரபுக் கல்லூரியினதும்
போக்குவரத்திற்கு அவசியமான இவ்வீதியை பொது மக்களும்
அதிக அளவில்
கடந்த காலங்களில்
பயன்படுத்தி வந்துள்ளார்கள் .
இவ்வாறு
முக்கியத்துவம் வாய்ந்த இவ்வீதியை புனரமைப்பு வேலையை
பூர்த்தி செய்யாது ,
வேறு வீதிகள்
பலவும் , நிந்தவூரில்
புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன .
நிந்தவூர் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட
மக்கள் பிரதிநிதிகள் ஒற்றுமைப்பட்டு அபிவிருத்தி வேலைகளை செய்யாது , தனித்தனியே செயற்படுவதனாலும் , ஆளுக்கு ஆள் கழுத்தறுப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு வருவதனாலும் ,
நிந்தவூரில் வைத்தியசாலை வீதி போன்ற பல முக்கிய அபிவிருத்திகள் செய்யப்படாதிருக்கின்றன .
நிந்தவூர்
மக்கள் பிரதிநிதிகளை
ஒற்றுமைப்படுத்துவதற்கு ஒரு சிலர்
முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள் .
அவர்களின் முயற்சிகள்
தோல்வியில் முடிந்துள்ளன . காரணம் , எம் . பிமாரும் ,
தவிசாளரும் ஒற்றுமைப்பட்டால் தங்களின் பிழைப்பு கெட்டுப்
போய்விடுமென்று குறுகிய சிந்தனையில் இயங்கிக் கொண்டிருக்கும் ,
சிறு குழுவினர்
அநாமோதய துண்டுப்
பிரசுரங்களை அடிக்கடி இரவு வேளைகளில் யாருக்கும்
தெரியாமல் போட்டுக்
கொண்டிருக்கின்றார்கள் .
ஆகவே ,
நிந்தவூர் வைத்தியசாலையின்
புனரமைப்பு வேலைகளை பூர்த்தி செய்வதற்கு நிந்தவூரில்
உள்ள பாராளுமன்ற
உறுப்பினர்களும் , பிரதேச சபையும் ஒற்றுமையுடன் முடிவுகளை
எடுத்து செயற்பட
வேண்டும் . வைத்தியசாலையின்
வீதியை புனரமைப்பு
வேலைகளுக்கான நிதியை பெற்றுக் கொள்வதற்கு பாராளுமன்ற
உறுப்பினர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .
நிந்தவூர்
மாவட்ட வைத்தியசாலையின்
அம்புலன்ஸ் வண்டி கடற்கரை வீதியால் சென்று ,
காரைதீவினை ஊடறுத்து , வெட்டு வாய்க்கால் வழியாக
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியை அடைகின்றது
என்பது குறிப்பிடத்தக்கது .
வைத்தியசாலைக்கான
புனரமைப்பு வேலைகள் கடந்த 16.07.2011 அன்று கிழக்கு
மாகாண அமைச்சர்
எம் . எஸ் . உதுமாலெவ்வை தலைமையில்
ஆரம்பித்து வைக்கப்பட்டது . வீதியை புனரமைப்பு செய்வதற்காக ,
விஸதரிக்க வேண்டிய
விடயத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டதனால் ,
அபிவிருத்தி பணிகள் காலதாமதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
இவ்வீதியின் புனரமைப்பு வேலைகளில் அமைச்சர் உதுமாலெவ்வை
கவனம் செலுத்த
வேண்டும்.
வேலையை ஆரம்பித்து வைத்தால் முடித்து வைக்கவும் வேண்டும் அல்லவா ?
இது மக்கள் விருப்பம்
வேலையை ஆரம்பித்து வைத்தால் முடித்து வைக்கவும் வேண்டும் அல்லவா ?
இது மக்கள் விருப்பம்
0 comments:
Post a Comment