உலகிலேயே முதன் முதலில் துபாயில் உருவாகப் போகும்

46 மைல் பரப்பளவில் குளிரூட்டபட்ட வணிக நகரம்

உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிபா  துபாயில்தான் உள்ளது. இதேபோல் இன்னொரு சாதனையை படைக்கவும் துபாய் தயாராகி வருகிறது. உலகின்  முதல் குளிரூடபட்ட நகரம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் அந்நாடு தற்போது ஈடுபட்டு வருகிறது

குளிரூட்டப்பட்ட இந்த நகரம் 46 மைல்கள் பரப்பளவில் அமைய உள்ளது. பிரமாண்ட வணிக நகரில்  தியேட்டர்கள், வீடுகள் உடைய தெருக்கள் சுகாதார நிலையங்கள் மற்றும் நான்கு மைல் தூரம் உள்ள கடைவீதிகள் ஆகியவை அமையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்துமே ஒரே கூரையின் கீழ் முழுவதும் குளிரூட்டபட்டதாக வசதி செய்யப்பட உள்ளது. 8 மில்லியன் சதுர அடியில் அமையவிருக்கும் இந்த மாலில் பெரும்பாலான வீடுகள், ஓட்டல்கள் ஆகியவை கண்ணாடிகளால் கட்டப்படவுள்ளன. வருடத்திற்கு 180 மில்லியன் சுற்றுலா பயணிகள் இந்த மாபெரும் குளிரூட்டபட்ட நகரில் அமைந்துள்ள இடத்தை பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top