மீனவர்களை
விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி
பிரதமருக்கு
ஜெயலலிதா கடிதம்
இலங்கை
கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை
விடுதலை செய்ய
நடவடிக்கை எடுக்கக்
கோரி தமிழக
முதல்வர் ஜெயலலிதா
பிரதமர் நரேந்திர
மோடிக்கு கடிதம்
எழுதியுள்ளார்.
ஜெயலலிதா
எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 5ஆம் திகதி
கடலில் 4 படகுகளில்
மீன்பிடித்துக் கொண்டிருந்த 20 இராமநாதபுரம்
மீனவர்களை இலங்கை
கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களோடு
சேர்த்து இலங்கை
சிறைகளில் வாடும்
தமிழக மீனவர்கள்
37 பேர் மற்றும்
இலங்கை வசம்
உள்ள தமிழக
மீனவர்களின் 45 படகுகளையும் விடுதலை செய்ய மத்திய
அரசு உடனடியாக
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
மேலும்,
இந்திய கடல்
எல்லைக்குள் பாதுகாப்பாக தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும்
வகையில், மத்திய
அரசு நிரந்தர
தீர்வு காண
வேண்டும் என்றும்
முதல்வர் ஜெயலலிதா கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

0 comments:
Post a Comment