அமெரிக்க நகரமான சிகாகோவில்
துப்பாக்கி சூடு
9 பேர் பலி 50
பேர் படுகாயம்
அமெரிக்காவின்
மூன்றாவது பெரிய
நகரமான சிகாகோவில்
வார விடுமுறை
நாட்களில் நடைபெற்ற
துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியாயினர் என
அறிவிக்கப்படுகின்றது.
கடந்த
வியாழன் மாலையிலிருந்து
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட
துப்பாக்கி சூடு சம்பவங்கள் சிகாகோவில் நடைபெற்றுள்ளது.
இதில் 9 பேர்
பலியாகியுள்ளனர். 50 பேர் படுகாயம்
அடைந்தனர். அதேபோல் திங்கள் கிழமையும் பல
இடங்களில் நடைபெற்ற
துப்பாக்கிசூடு சம்பவத்தோடு சேர்த்து மொத்தமாக 14 பேர்
பலியகியுள்ளனர் என்றும் 80 க்கும் மேற்பட்டோர் படுகாயம்
அடைந்துள்ளனர் என்று சிக்கோகாவில் உள்ள செய்தித்தாள்
ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த
சம்பவத்தை ஏற்றுக்கொள்ள
முடியாது என்று
தெரிவித்துள்ள சிக்காகோ பொலிஸ் கண்காணிப்பாளர் கார்ரி
மெக்கார்த்தி, துப்பாக்கிகளின் பெருக்கமே இதற்கு காரணம்
என தெரிவித்து
இருக்கிறார்.
துப்பாக்கிசூடு
நடத்திய 5 பேர்
சுட்டுகொல்லப்பட்டனர் என்றும் அதில்
இரண்டு பேர்
பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று
இடங்களில் பொலிஸார்
துப்பாக்கியால் சுட்டவர்களை சுற்றிவளைத்த போது, அவர்கள்
பொலிஸாரை நோக்கி
துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதனாலேயே பொலிஸார்
அவர்களைச் சுட
நேர்ந்ததாக அவர் கூறியுள்ளார்.


0 comments:
Post a Comment