உலக கோப்பை
கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும்
முதலாவது கால் இறுதி ஆட்டத்தில்
ஜெர்மனி–பிரான்ஸ் அணிகள்
பலப்பரீட்சை
உலக
கோப்பை கால்பந்து
போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது கால்
இறுதி ஆட்டத்தில்
ஜெர்மனி–பிரான்ஸ்
அணிகள் பலப்பரீட்சை
நடத்துகின்றன.
20–வது
உலக கோப்பை
கால்பந்து திருவிழா
பிரேசிலில் நடந்து வருகிறது. இதில் கடந்த
செவ்வாய்க்கிழமையுடன் 2–வது சுற்று
ஆட்டம் முடிந்தது.
இதன் முடிவில்
முன்னாள் சாம்பியன்கள்
பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து, பெல்ஜியம், கொலம்பியா, கோஸ்டாரிகா ஆகிய 8 அணிகள்
கால் இறுதிக்கு
முன்னேறின.
இரண்டு
நாள் ஓய்வுக்கு
பிறகு கால்
இறுதி ஆட்டங்கள்
இன்று (வெள்ளிக்கிழமை)
தொடங்குகிறது. இதில் ரியோடி ஜெனீரோவில் இலங்கை
நேரப்படி இரவு
9.30 மணிக்கு நடைபெறும் முதலாவது கால் இறுதி
ஆட்டத்தில் ஜெர்மனி–பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.
உலக
தர வரிசையில்
2–வது இடத்தில்
இருக்கும் ஜெர்மனி
அணிக்கு, 17–வது இடத்தில் உள்ள பிரான்ஸ்
அணி எல்லாவகையிலும்
ஈடுகொடுத்து ஆடும் என்பதால் இந்த ஆட்டம்
கடைசி வரை
கடுமையாக இருக்கும்
என்ற எதிர்பார்ப்பு
நிலவுகிறது.
பிரேசிலுக்கு
அடுத்தபடியாக உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்தும்
அணியாக ஜெர்மனி
விளங்கி வருகிறது.
18–வது முறையாக
உலக கோப்பையில்
பங்கேற்கும் ஜெர்மனி அணி 1954, 1974, 1990–ம் ஆண்டுகளில் பட்டம் வென்று இருக்கிறது.
ஜெர்மனி அணி
13–வது முறையாக
அரை இறுதிக்குள்
அடியெடுத்து வைக்கும் முனைப்பில் உள்ளது. கடந்த
3 முறை தொடர்ந்து
அரை இறுதிக்குள்
நுழைந்து இருக்கிறது.
ஜெர்மனி
அணியில் நட்சத்திர
பட்டாளங்களாக தாமஸ் முல்லர், லூகாஸ் பொடோல்ஸ்கி,
மெசுத் ஒசில்,
வெய்ன்ஸ்டீகர், மிரோஸ்லோவ் குளோஸ் ஆகியோர் உள்ளனர்.
கடைசி உலக
கோப்பையில் விளையாடும் குளோஸ் இன்னும் ஒரு
கோல் அடித்தால்
பிரேசில் முன்னாள்
வீரர் ரொனால்டோவின்
சாதனையை (15 கோல்கள்) தகர்க்க முடியும். தாமஸ்
முல்லர் 4 கோல்கள்
பதிவு செய்துள்ளார்.
தசையில் ஏற்பட்ட
காயத்தால் அவதிப்பட்டு
வந்த முன்னணி
வீரர் பொடோல்ஸ்கி
உடல் தகுதி
பெற்று இருக்கிறார்.
அதேநேரத்தில் மற்றொரு முன்னணி வீரரான வெய்ன்ஸ்டீகர்
தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
அவர் இன்றைய
ஆட்டத்தில் களம் காண்பாரா? என்பது கேள்விக்குறியாகி
இருக்கிறது.
லீக்
ஆட்டங்களில் ஜெர்மனி அணி 4–0 என்ற கோல்
கணக்கில் போர்ச்சுக்கலை
வீழ்த்தியது. கானாவுடன் 2–2 என்ற கோல் கணக்கில்
டிரா கண்டது.
கடைசி லீக்
ஆட்டத்தில் 1–0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை
சாய்த்தது. 2–வது சுற்று ஆட்டத்தில் கூடுதல்
நேரத்தில் 2–1 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை
தோற்கடித்து கால் இறுதிக்குள் கால் வைத்தது.
பிரான்ஸ்
அணியும் சிறந்த
நிலையில் உள்ளது.
ஜெர்மனியை போல்
தோல்வியை சந்திக்காமல்
கால் இறுதிக்
முன்னேறி இருக்கிறது.
1998–ம் ஆண்டு
சாம்பியனான பிரான்ஸ் அணி 5 முறை அரை
இறுதியை எட்டி
இருக்கிறது. கடந்த உலக கோப்பையில் முதல்
சுற்றில் மூட்டையை
கட்டியது. லீக்
ஆட்டங்களில் பிரான்ஸ் அணி 3–0 என்ற கோல்
கணக்கில் ஹோண்டுராசையும்,
5–2 என்ற கோல்
கணக்கில் சுவிட்சர்லாந்தையும்
தோற்கடித்தது. 0–0 என்ற கணக்கில்
ஈகுவடாருடன் டிரா கண்டது. 2–வது சுற்று
ஆட்டத்தில் 2–0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை
விரட்டியது. பிரான்ஸ் அணியில் 2 கோல்கள் அடித்து
இருக்கும் கரீம்
பெஞ்சிமா, ஆலிவர்
ஜிராட், பால்
போக்பா ஆகியோர்
நட்சத்திர வீரர்களாக
விளங்குகிறார்கள். இவர்களின் ஆட்டம்
ஒருசேர எடுபட்டால்
ஜெர்மனி அணிக்கு
நிச்சயம் தலைவலி
ஏற்படும் என்பதில்
சந்தேகம் இல்லை.





0 comments:
Post a Comment