சரவணன் - மீனாட்சி நிஜ ஜோடியானார்கள்

'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்த மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா இருவருமே தற்போது நிஜ வாழ்க்கையில்  திருமணம் செய்து கொண்டார்கள்.
தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் 'சரவணன் மீனாட்சி'. இத்தொடரில் சரவணனாக மிர்ச்சி செந்திலும், மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நடித்திருந்தனர். இளைஞர்கள் மத்தியில் 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலமாக இருவருமே பிரபலமாக வலம் வந்தனர்.
இவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் இருவருமே அச்செய்திகளை மறுத்து வந்தார்கள்மிர்ச்சி செந்தில் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் இந்நிலையில் திருப்பதியில் செந்தில் - மிர்ச்சி ஸ்ரீஜா இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். செந்திலுக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டார்கள் என அறிவிக்கப்படுகின்றது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top