இந்திய
தேசத்தின் தந்தை மகாத்மா காந்திக்கு
லண்டன் பாராளுமன்ற
சதுக்கத்தில் சிலை
இந்திய
தேசத்தின் தந்தை மகாத்மா காந்திக்கு லண்டன்
பாராளுமன்ற சதுக்கத்தில் இந்த ஆண்டு
இறுதிக்குள் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனின்
வெளியுறவுத்துறை மந்திரி வில்லியம் ஹாக் மற்றும்
நிதி மந்திரி
ஜார்ஜ் ஆஸ்போர்ன்
இருவரும் இந்தியாவுக்கு
சுற்றுப்பயணமாக சென்றுள்ளனர். உலகம் முழுவதும் அகிம்சை
கொள்கையை பரவச்செய்த
மகாத்மா காந்தியின்
கொள்கையால், ஈர்க்கப்பட்ட இவர்கள் லண்டன் பாராளுமன்ற
சதுக்கத்தில் காந்திக்கு சிலை அமைக்கும் விருப்பத்தை
தெரிவித்துள்ளனர்.
'காந்தியின்
மத நல்லிணக்கம்,
வகுப்புவாத பிரிவு எதிர்ப்பு, இந்தியாவை முன்னேற்ற
பாதையில் எடுத்து
செல்ல அவர்
வகுத்த பாதைகள்,
வன்முறையில் நாட்டமின்மை ஆகியவை இன்றைய வாழ்க்கைக்கு
கூட பொருத்தமாகவே
உள்ளது. அவருடைய
சிலையை லண்டனில்
அமைப்பதன் மூலம்
நாங்கள் மரியாதை
செலுத்த விரும்புகிறோம்'
என்று தெரிவித்துள்ளனர்.
மகாத்மா
காந்தி இந்தியாவை
வெள்ளைகாரர்களிடம் இருந்து மீட்டுக்கொடுத்து
67 ஆண்டுகள் ஆகிவிட்டன.

0 comments:
Post a Comment